இலங்கையை காலணியாக கருதி பிரித்தானியா செயற்படுகின்றது – கோதபாய

Gotabhaya-Rajapaksa2இலங்கையை தொடர்ந்தும் காலணியாக கருதி பிரித்தானியா செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானியா காலணித்துவ ஆட்சியாளரைப் போன்று இலங்கையை நடத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்றுள்ள சில பிரித்தானிய பிரதிநிதிகளின் நடவடிக்கைள் இருதரப்பு உறவுகளை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய அமைச்சர்களான வில்லியம் ஹேக் மற்றும் ஹியூகோ ஸ்வாயர் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply