பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது

CHOGMபொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இன்றைய தினம் தாமரைத் தடாக அரங்கில் ஆரம்பமாகவுள்ளது, இன்று காலை 10.15 மணி அளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்வு பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. 51 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

25 நாடுகளின் தலைவர்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரதமர், அவுஸ்திரேலிய பிரதமர், நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்னர். இன்றைய தினம் நடைபெறவுள்ள அமர்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இளவரசர் சார்ள்ஸ், அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இந்தியா, கனடா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகள் அரச தலைவர்கள் இந்த அமர்வுகளை புறக்கணித்துள்ளனர்.

Tags: ,

Leave a Reply