பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாடு குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (14) இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோர் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிநாட்டுக்குக் கோரிக்கைக்கு இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்கத் தயக்கமில்லை எனவும் தெரிவித்தார்.
















