பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நோக்கமாக அமைய வேண்டுமென இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதனை விடவும் அவற்றுக்கு தீர்வு காணும் பொறுப்பு பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு காயங்களை ஆற்றும் வகையில் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஆழிப்பேரலை உள்ளிட்ட பல்வேறு பாரிய நெருக்கடிகளை இலங்கை கடந்த காலங்களில் எதிர்நோக்கியது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலக் காயங்களை ஆற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய மஹாராணியை பிரதிநிதி;த்துவம் செய்யக் கிட்டியமை பெரும்பாக்கியமாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினருக்கும் மஹாராணி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
















