பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் நாடுகளை இலக்கு வைத்து செயற்படக் கூடாது – மக்களே தேசத்தின் பிரதான சொத்தாகும் – மகிந்தராஜபக்ஸ
ஒற்றமையை உறுதிப்படுத்துவதே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பிரதான நோக்கமாகும் – கமலேஷ் சர்மா
ஒற்றுமையை உறுதி செய்வதே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பிரதான நோக்கமாகும் என அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒரே குடும்பத்தைப் போன்று ஒன்றிணைந்து முன்நோக்கி நகர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு தமாரைத் தடாக அரங்களில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை களையும் ஓர் உறவுப் பாலமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைத்து வருவதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் நாடுகளை இலக்கு வைத்து செயற்படக் கூடாது – ஜனாதிபதி
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் நாடுகளை இலக்கு வைத்து செயற்படக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நாடுகளை இலக்கு வைத்து செயற்படுவதனை விடவும் பரந்தளவிலான விடயங்கள் குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு தாமரைத் தடாகத்தில் சற்று முன்னர் ஆரம்பமான பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை புதிய சகாப்தம் ஒன்றை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சமாதானமும், ஸ்திரதன்மையையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கை பயணத்தை ஆரம்பித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் இலங்கை மனித உரிமை நிலைமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களே தேசத்தின் பிரதான சொத்தாகும் – ஜனாதிபதி
மக்களே தேசத்தின் பிரதான சொத்தாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வறுமை ஒழிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலிறுயுத்தியுள்ளார்.
உணவு, சுகாதாரம், குடிநீர் போன்ற தேவைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு விடயங்களுக்கு பொதுநவலாய நாடுகள்; அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான விடயங்களை பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஏற்றுக்கொள்ளாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் மிக முக்கியமான மனித உரிமையாக மனிதரின் வாழும் உரிமையை தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதன் மூலம் இந்த மிக முக்கியமான மனித உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
தனிப்பட்ட விடயங்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ முதனிலைப்படுத்தி பொதுநலவாய நாடுகள் உறுப்பு நாடுகள் செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஓர் தண்டனை வழங்கும் நிறுவனமாகவோ அமைப்பாகவோ எவரும் கருதக் கூடாது எனவும் மக்களின் சகவாழ்வை உறுதிப்படுத்தும் ஓர் அபிவிருது;தி சார்ந்த அமைப்பாகும் எனவும் அவா சுட்டிக்காட்டியுள்ளார்.
2009ம் ஆண்டின் பின்னர் நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















