அப்பாவின் வருகையை பார்த்திருக்கும் குஞ்சுகள்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அன்பு வணக்கம்.
வழமையில் தங்களுக்குக் கடிதம் எழுது வதைத் தவிர்த்து வந்தோம்.

எனினும் புத்தாண்டில் ஆனந்தசுதாகரன் உங்களோடு இருப்பார் என்று அவரின் பிள்ளை களுக்கு நீங்கள் கூறிய உறுதிமொழியை நினைவுபடுத்துவதற்காகவும் நீங்கள் கூறிய உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்? என்பது தெரியாததன் காரண மாகவுமே இக்கடிதத்தை தங்களுக்கு எழுதத் தலைப்பட்டோம்.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன அவர்களே! ஆனந்தசுதாகரன் ஆயுள் தண்டனை பெற்ற ஒரு தமிழ் அரசியல் கைதி. அவரின் மனைவி அண்மையில் நோய்வாய்ப் பட்டு இறந்து விட்டார்.

இரண்டு பிள்ளைகள். மிகச் சிறிய வயது. தந்தை சிறையில்; தாய் இறந்து விட்டார். இந் நிலையில் அந்தப் பிள்ளைகள் அநாதைகளா கியுள்ளனர்.
இது விடயம் தொடர்பாகத் தாங்கள் அனைத் தும் அறிந்திருந்தீர்கள். ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் உங்களைச் சந்தித்தனர். நீங் களும் நெகிழ்வோடு அந்தப் பிள்ளைகளை அரவணைத்தீர்கள்;

உங்கள் தந்தை ஆனந்தசுதாகரன் வருகி ன்ற தமிழ் – சிங்கள புத்தாண்டில் உங்களோடு இருப்பார் என்று கூறி, அந்தப் பிள்ளைகளை ஆற்றுப்படுத்தினீர்கள். அந்தப் பிள்ளைகளும் நம்பிக்கையோடு தந்தையின் வரவைப் பார்த் திருந்தனர்.
தமிழ் – சிங்கள புத்தாண்டு வந்தது. ஆனால் தந்தை ஆனந்தசுதாகரன் வரவில்லை. இந்த நிலைமை அந்தப் பிள்ளைகளுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நெகிழ்ந்த மனம் படைத்த தங்களுக்கு எவரும் எடுத்தியம்பத் தேவையில்லை என்பது நம் தாழ்மையான கருத்து.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே! சைவ சமயத்தில் ஒரு கதையுண்டு.
ஒரு காட்டில் பன்றி ஒன்று பன்னிரண்டு குட்டி களை ஈன்றது. இரை தேடிச் செல்லும் வழி யில் ஒரு வேடுவன் அந்தப் பன்றியைக் கொன்று விட்டான்.
தாயை இழந்த பன்றிக் குட்டிகள் பசியால் வருந்தின. இதனைப் பார்த்த சிவன் அந்தப் பன்றிக் குட்டிகள் மீது இரக்கம் கொண்டார். தாய்ப் பன்றியாக உருவெடுத்து அந்தப் பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தார்.

இந்தக் கதை சிவனின் அற்புதத்தை உணர் த்தும் பொருட்டுக் கூறப்பட்டதல்ல. மாறாக தாயின் பாசத்தை தாயால் மட்டுமே வழங்க முடி யும் என்ற உண்மைத் தத்துவத்தை உணர்த்து வதற்கேயாம்.
ஆக, தாயை இழந்த அந்தச் சின்னஞ்சிறுசு களைக் கவனிப்பதற்கு யார் இருந்தாலும் கூடவே தந்தை இருந்தால் அந்தப் பிள்ளை களின் கவலை, துன்பம், தாயை இழந்த வேதனை ஆறுமல்லவா.

ஆகவே, நீங்கள் கூறிய வார்த்தையை நம்பியபடி தந்தையின் வருகையை படலை வழி பார்த்திருக்கும் அந்தக் குஞ்சுகளின் ஏக் கத்தை தீர்த்து வையுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!