புதிய முதல்வருடன் டேவிட் கமரூன் சந்திப்பு

camaran-vikyயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று (15) பிற்பகல் யாழ். பொது நூலகத்தில் வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கிற்கு விஜயம் செய்து மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாக வடக்கு அரசியல் தலைவர்கள் தன்னிடம் கூறியதாக டேவிட் கமரூன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பின் யாழ். பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்குச் சென்ற பிரித்தானிய பிரதமர் அங்கு ஊழியர்கள் மற்றும் பிரதானியுடன் கலந்துரையாடிய பின் வலிகாமம் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்தார்.

Tags: , ,

Leave a Reply