விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் செயற்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கைக்கு வந்திருந்த பிரித்தானிய பிரதமர் கமரூன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவருடைய இலங்கை விஜயத்திற்கு பின்னரான செயற்பாடு, பிரித்தானியாவில் உள்ள உலக தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் பின்னணியில் இடம்பெற்றுள்ளது. மேலும் பிரதமர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் பிரித்தானிய பிரதமரின் குழுவினரை, பிரித்தானிய வாழ் தமிழ் குழுக்கள் சந்தித்திதும் உள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தல் வெற்றியை கருத்திற்கொண்டுசெயற்படும் ஒரு செயற்பாடே இலங்கையிலும் இடம்பெற்றிருக்கிறது என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போர்க்குற்றம் தொடர்பில் கமரூனின் எச்சரிக்கை, இலங்கை இன்னும் பிரித்தானிய ஆளுகைக்குள் இருப்பதை போன்ற நிலைமையில் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளார்.
















