இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்றிருந்தால் இந்தியாவின் காத்திரத்தை காட்டியிருக்க முடியும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நண்பரான பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையின் பொதுநலவாய அமர்வில் பங்கேற்காமை குறித்து தாம் கவலையடையவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன் மோகன் சிங் இலங்கைக்கு வராமை துரதிஸ்டவசமானதெனவும் அவர் இலங்கை வந்திருக்க வேண்டும் எனவும் இந்தியர்களை தாம் விரும்புவதாகவும் பசில் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
















