வருடாந்த தவணைப் பணம் செலுத்தாத கல்லறைகளை கறுப்புப பையால் மூடி அறிவுறுத்திய பராமரிப்பு நிறுவனம்

Akasiaநோர்வேயிலுள்ள மயானமொன்றில் கல்லறைகளை சில கறுப்புப் பையினால் மூடி வருடாந்த தவணைப் பணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளமை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகக்கியுள்ளது.

நோர்வேயின் பேர்கென் நகரின் நகர சபைக்கு சொந்தமான மொலென்டல் மயானத்தை பராமரிக்கும் அகஸியான என்ற நிறுவனமே இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் இந்த மயானத்துக்கு பேர்கென் பலகலைக்கழகத்தின் அரசியல் விரிவுளையாளர் தோர் ஒய்வினட் ஜென்ஸென் என்பவர் அவரது மனைவியுடன் சென்றுள்ளார்.

குறித்த அறிவுறுத்தல்களைக் கண்ட விரிவுரையாளர் அவற்றைப் படம்பிடித்து பேஸ்புக்கில் வெளியிட்டதுடன் இது முறையற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இது கடன் வசூலிப்பது போலுள்ளது. இது வாகனத் தரிப்பிட பராமரிப்பாளர் வாகனங்களை எவ்வாறு தடுத்து வைத்திருப்பார் என்பதனை எனக்கு ஞாபகமூட்டியது. அங்கு சுமார் 670 கல்லறைகளில் இந்த வசூலிப்பு அறிவுறுத்தல் இணைக்கப்பட்டுள்ளது என விரிவுரையாளர் தோர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மயானத்தில் புதைக்கப்படும் போது பராமரிப்புக்கு ஆரம்பக் கட்டணம் செலுத்தவேண்டும். 25 வருடங்களின் சவப்பெட்டியையும் 20 வருடங்களின் பின்னர் சாம்பல் கிண்ணதையும் பாதுகாக்க முறையே வருடத்துக்கு 518 (சுமார் 12,300 ரூபா) மற்றும் 363 (சுமார் 8,600 ரூபா) க்ரோன்கள் செலுத்த வேண்டும். இல்லையெனில் கல்லறை அடிக்கல் அகற்றப்படுவிடும்.

‘கல்லறை காலாவதியாகும். எனவே இதனை மீண்டும் பயன்படுத்தலாம்’ என அகஸியா நிறுவனம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

கறுப்பு பிளாஸ்டிக் பேக்கினால் மூடி கல்லறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு 6 மாதம் அவகாசம் கொடுக்கப்படுகிறதாம். பேர்கென் பகுதியில் கல்லறையுடன் சம்பந்தப்பட்ட 15 உறவினர்களின் தொடர்பு இழக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அகஸியாவின் திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: , ,

Leave a Reply