பரபர கிசுகிசுவாக ஓடிக் கொண்டிருக்கிறது, உடன் நடித்த நடிகையுடன் ரகசியத் திருமணம் முடித்து தனிக்குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார் நடிகர் விஷால் என்ற செய்தி.
தமிழ் இளைஞர்கள் வேண்டுமானால் என்னைக் காதலித்துக் கொள்ளட்டும். ஆனால் மணந்தால் மலையாளிதான் என்று கூறிக்கொண்டிருந்த அந்த களையான நடிகையைத்தான் மனைவியாக்கிக் கொண்டார் என சிலரும், இல்லையில்லை இவர் வேறு என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து விசால் தெரிவித்துள்ளதாவது,
நான் எந்த விஷயத்தையும் பெரும்பாலும் மறைத்ததில்லை. அதுவும் மீடியாவிடம் உண்மையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஹிட் கிடைச்சிருக்கு. இன்னும் இப்படி நிறைய சந்தோஷங்களைப் பார்க்கணும் நான்.
அப்புறம் திருமணம் எனும் பெரிய சந்தோஷத்தை அனுபவிச்சிக்கிறேன். இது வெறும் கிசுகிசுதான்.. எனக்கு அதில் வருத்தமும் இல்லே,” என்றார்.
















