சிம்புவையும், ஹன்ஷிகாவையும் கூட எதையாவது சொல்லி பிரிச்சி விட்டுடலாம். ஆனா இந்த மதுரையையும், தமிழ்சினிமாவையும் பிரிக்கவே முடியாது போலிருக்கு.
தொடர்ந்து தமிழ்சினிமாவில் மதுரையை கதைக்களமாகக் கொண்ட படங்கள் கண்டமேனிக்கு கல்லா கட்ட, இப்போது மற்ற ஸ்டேட்டுகளிலிருந்து வரும் ஹீரோக்கள் கூட என்னோட பூர்வீகம் மதுரை தான் என்று பொய் சொல்லி பெருமை தேடிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.
ஆனால் என்னதான் மதுரையை கதைக்களமாக கொண்ட படங்கள் வசூலை வாரிக் குவித்தாலும் படங்களின் கதைக்கருவோ மிகவும் கொடுமையான முறையில் கொலை, கொள்ளை , கற்பழிப்பு என்று வன்முறைகளின் உச்சமாக வருவது தான் மதுரையை பற்றிய ஒரு தவறான அபிப்ராயத்தை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்குகிறது.
அருள்நிதி நடிக்கும் தகராறு படத்தின் கதையை திருநெல்வேலியிலும் எடுக்கலாம் தான். ஆனால் சென்டிமெண்ட்டாக மதுரைப் படங்கள் ஹிட்டாவதால் தயாரிப்பாளர் துரை தயாநிதிதான் மதுரை பேக்கிரவுண்ட்ல என்னை எடுக்கச் சொன்னார் என்ற உண்மையைச் சொல்கிறார் டைரக்டர் கணேஷ் விநாயக்.
இந்தப்படமும் நான்கு பகல் கொள்ளையர்களைப் பற்றிய கதை என்பதால் டென்ஷனான ஒரு நிருபர்
முன்னென்னால் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், மதுரை வீரன் என்று மதுரை மண்ணின் பெருமை பேசும் படங்கள் ரிலீசாகின. ஆனால் சமீபகாலமாக ரிலீசாகும் மதுரைப் படங்கள் எல்லாமே கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று மதுரையை மிகவும் கோரமாகக் காட்டுகிறதே..? இது சரியா..? என்று ஒரு கேள்வியை கேட்டார்.
அவரின் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத டைரக்டர் கணேஷோ என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் திணறினார். உடனே பக்கத்தில் இருந்த ஹீரோ அருள்நிதி சார், இது வெறும் படம் தானே சார், ஏன் நீங்க அப்படி பார்க்கிறீங்க..? என்று சொல்லி சமாளித்தார்.
ஆனால் என்னதான் இப்படி சாக்குபோக்கு சொல்லி சமாளித்தாலும் இப்படித்தானே மதுரை காட்டப்படுகிறது..யோசிங்கண்ணே!
















