யுத்தத்தினால் தாய் தந்தையரை இழந்த பெரியமடு உறவுகளுக்கு உதவிகள்

vav-periya1வவுனியா பெரியமடுப் பிரதேச தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உதவிகள் நேற்றைய தினம் (18) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் காரணமாக தமது தாய், தந்தையர்களை இழந்த நிலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் நெடுங்கேணி பெரியமடுவைச் சேர்ந்த 19 மாணவர்களுக்கு ரூபாய் மூவாயிரம் வீதம் வங்கியில் வைப்பிலிட்டு அதற்கான வங்கிக் கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பிரான்ஸ் ரி.ரி.ஆர். வானொலியினால் இவ் மாணவர்களுக்கான உதவித்திட்டங்கள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக வழங்கப்பட்டது.

நெடுங்கேணி பெரியமடுப்பிரதேசத்தின் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, வவுனியாவடக்கு பிரதேச சபை உப தவிசாளர் தணிகாசலம், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எம்.பரமேஸ்வரன், சின்னடம்பன் பாரதி வித்தியாலய அதிபர் கெங்காதரன் உள்ள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
vav-periya2

vav-periya3

vav-periya4

vav-periya5

Tags: , , , ,

Leave a Reply