இன்று முதல் இலங்கையில் ஐசோன் வால் உடு

skyஇன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையர்களுக்கு வால்நட்சத்திரம் ஒன்றை வெற்றுக்கண்களால் பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்த நூற்றாண்டின் வால்நட்சத்திரம் என பெயரிடப்பட்டுள்ள ஐசோன் என்ற இந்த வால்நட்சத்திரம் சூரியனை மெதுமெதுவாக நெருங்கி வருவதுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி இது சூரியனுக்கு மிக நெருக்கமாக வந்தடையும்.

இதனை கிழக்கு வானில் அதிகாலை 5.00 மணியளவில் காணமுடியும் என தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 2012 ஆம் ஆண்டே இந்த வால்நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இதற்கு ஐசோன் என பெயரிடப்பட்டது வால்நட்சத்திரம் தென்படுகையில் சூரியன் உதயமாகியிருந்தால் வெற்றுக் கண்களினால் பார்ப்பதை தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply