அடுத்த ஆண்டு தொடங்கப்படவிருக்கும் வர்த்தக ரீதியிலான விண்வெளி சுற்றுலாப் பயணத்தில் கலந்து கொள்ள பணக்காரர்கள் நிறைந்த ஐக்கிய அமீரகத்தில், நெதர்லாந்தைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று பயணச் சீட்டுகளை ஒரு லட்சம் டொலர்களுக்கு விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.
“ஸ்பேஸ் எக்ஸ்படிஷன் கார்ப்பரேஷன்´ (எக்.எக்ஸ்.சி) என்ற அந்த நிறுவனம், விண்வெளிக்குச் சென்று திரும்பும் வகையிலான விமானத்தை உருவாக்கி, முடிக்கும் தருவாயில் உள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் மோல் கூறுகையில், “”இந்த விமானம் மூலம், பயணிகள் ஒலியைவிட அதிக வேகத்தில் விண்வெளி சென்று, அங்கிருந்து பூமியை நேரடியாகக் காணும் அனுபவத்தைப் பெறுவார்கள்.
ஒரு முறை பயணத்தில் விமானியைத் தவிர ஒரு பயணி மட்டுமே செல்ல முடியும்´´ என்று தெரிவித்தார்.
















