தம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை

Mahinda5தம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமை மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய சில நாடுகள் விசாரணைகளை முடித்துக் கொள்ள நாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை விவகாரத்தில் மட்டும் துரித கதியில் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எதனையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply