முஸ்லிம் இளைஞரை கல்லால் அடித்துக் கொன்ற இந்து மதவெறி!

mus-motherமுசாபர் நகர்: மகனை இழந்த முஸ்லிம் தாயின் புகாரை அவமதிக்கும் போலீஸ்

முசாபர்நகர் கலவரம் முடிவடைந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகின்றது. 75 வயதான மூதாட்டி நவாப் பேகம் தனது மகனைக் கொன்றவர்களின் பெயர், அடையாளம் ஆகியவற்றைக்கூறியும் முதல் தகவலறிக்கையை புதிவு செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது அகிலேஷ் அரசின் போலீஸ் துறை.

செப்டம்பர் 10ஆம் தேதி நவாப் பேகத்தின் மகன் கலீல் (25) லோனியிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும்போது 4 பேரினால் கொடூரமாக கொலை செய்ததாக தாயார் பேகம் கூறுகிறார்.

உச்சநீதிமன்றம்…

இதுபோன்ற குற்றங்களில் உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்யவேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது. குறிப்பாக கொலை, கற்பழிப்பு, கொள்ளை, முகமுடிக் கொள்ளை ஆகிய புகார்களின் அடிப்படையில் முதல் தகவலறிக்கை உடனடியாகப் பதிவு செய்தாகவேண்டும் இதுதான் சட்டம்.

ஆனால் நவாப் பேகம் நடையாக நடந்தும், தன் மகனின் ரத்தம் தோய்ந்த துணியை அடையாளம் காட்டியும், கொலை செய்த 4 பேரின் அடையாளத்தைக் கூறியும் மகனின் உடலுடன் வா முதல் தகவலறிக்கை பதிவு செய்கிறோம் என்கிறது உ.பி. போலீஸ்.

அந்தத் தாய் இது குறித்து இந்தித் தொலைக்காட்சி ஒன்றில் கூறியதாவது:

“கல்லு ஜேவர், அனிக் பனியா, ஷைலேந்திர ஜாட், மற்றும் கானா ஆகிய 4பேரும் எனது மகனை பேருந்திலிருந்து இறக்கி தாக்குதல் நடத்தினர், என் மகன் தன் உயிரைக் காத்துக் கொள்ள யமுனை நதிக்கரைக்கு ஓடினான். ஆனால் கொலைகாரர்கள் அவனைத் துரத்திப் பிடித்துக் கொலை செய்தனர். என்று அந்தத் தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

நவாப் பேகத்தின் ஒரே மகன் அவர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கொலை மாலை 4 மணிக்கு நடந்ததாகக் தொலைக்காட்சியில் கூறினார். அவர் கூறுகையில், 4 பேரும் யமுனை நதிக்கரைக்க்கு ஓடிய கலீலை கல்லால் அடித்துக் கொன்றனர். நான் போலீஸிடம் கூறினேன் ஆனால் அவர்கள் செயல்படவில்லை. போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்தபோது அங்கு ரத்தம் தோய்ந்த உடைகள்தான் இருந்தது. உடலைக் காணவில்லை என்றார்.

கலீல் திருமணனாவர். உடைகளை தன் மகனுடையது என்று அடையாளம் கண்ட தாய் மருமகளுடன் பாக்பாட் காவல் நிலையத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி புகார் கொடுக்கச் சென்றார். கலீல் கொலைசெய்யப்பட்டான் என்பதை நிரூபிக்க அவரது உடலைக் கொண்டுவராமல் முதல் தகவலறிக்கை பதிவு செய்ய மாட்டோம் என்று போலீஸ் மறுத்துள்ளது.

மகனை இழந்த முஸ்லிம் தாய்க்கு நீதி கிடைக்குமா?

Photo: FILE

Tags: , ,

Leave a Reply