இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் தீர்வு காண உதவி! ஐரோப்பிய ஒன்றியம்

fishermen2இலங்கைக் கடலில் எல்லை மீறிவந்து மீன் பிடிப்பவர்களை தடுக்க இந்தியா தவறியுள்ளமைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதியமைச்சர் ஒருவர் வலியுறுத்தும் நிலைமையில், இலங்கையும் இந்தியாவும் இருபக்கத்துக்கும் திருப்தியான முறையில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதை தாம் ஊக்குவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று புதன்கிழமை கூறியது.

தவறான மீன்பிடி முறைகள் பற்றி இலங்கையை எச்சரித்த ஐரோப்பிய ஒன்றியம் சட்டத்தை மீறிய இந்தியா மீன்பிடித்தல் பற்றி மௌனம் காப்பது ஏன் என பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுபற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் டேவிட் டேலியிடம் கேட்டபோது, இந்த பிரச்சினை இருதரப்பு பிரச்சினையாக இருப்பதால் அந்த மட்டத்திலேயே அது தீர்க்கப்பட வேண்டுமென கூறினார்.

சர்வதேச கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை டேலி பாராட்டினார்.

Tags: ,

Leave a Reply