உலகில் மிகவும் கீழ்த்தரமான செயற்பாட்டை செய்யக்கூடியவர் மகிந்த ராஜபக்ச என்பதை ஒவ்வொரு பிரஜையும் உணரவேண்டும். பிரஜைகள் குழுவின் காப்பாளர் சண்

sun-masterஉலகத்தின் கீழ்த்தரமான மிலேச்சத்தனமாக காட்டு மிராண்டித்தனமான செயற்பாட்டை மகிந்த ராஜபக்ச மட்டுமே செய்வார் என்பதை ஒவ்வொரு பிரஜைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும் என வவுனியா பிரஜைகள் குழுவின் காப்பாளர் சண் மாஸ்ரர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு தழுவி அரசியலுக்கு அப்பாலான சிவில் அமைப்புகள் உரிமைக்காக ஒன்றுபட கூடாது என்பதில் மகிந்த அரசு உறுதியாக உள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவை பலவீனப்படுத்துவதற்கு வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியம் என்ற பெயரில் ஓர் அமைப்பினையும் முல்லைத்தீவு பிரஜைகள் குழு என்ற பெயரில் கொக்குதொடுவாய் கருணாட்டான்கேணி போன்ற பிரதேசங்களில் நீண்ட காலமாக தமிழர்களின் நிலங்கைள கபலிகரம் செய்கின்ற பிக்குவை தலைமையாக கொண்டு பிரஜைகள் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வேளையில் எமது போராட்ட்திற்கு பெயர் என்பது முக்கியமானதல்ல. வட மாகாணசபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற பெயரில் இரட்டை இலை சின்னத்தில் எவ்வாறு சிலர் களமிறக்கப்பட்டு அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறு மண் கவ்வினார்கள். எனவே தமிழ் மக்களின் உரிமைக்காக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக அல்லது இலங்கை அரசின் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கப்போகும் எமக்கு அலுவலகங்களோ, நிர்வாக பொறி முறைகளோ தேவையென்பதை நாம் கவனமெடுக்கவில்லை.

ஏனெனில் அவ்வாறான ஜனநாயக ரீதியிலான கட்டமைப்புகளை நாம் உருவாக்கும் போது இலங்கை அரசு எம்மை இலக்கு வைக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா காளிகோவிலில் காணாமல் போனோரை விடுவிக்குமாறு கோரி தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில் அதிகாலையிலேயே வவுனியாவில் அனைத்து தேங்காய்களும் சிலரால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நல்ல வேளையாக இன்று தீப்பந்த போராட்டம் நடத்த நாம் முடிவு செய்த வேளை இலங்கை அரசு கடைகளில் இருந்த தேங்காய் எண்ணையை கொள்வனவு செய்ய முடியாது போயுள்ளது. அதன் காரணமாக நாம் எண்ணையை பெறக்கூடியதாக இருந்தது. இன்று இறந்த ஆத்மாக்களை புனிதர்களாகவே சர்வதேச பிரகடனங்களும் நியமங்களும் கூறி நிற்கின்றது.

ஆனால் இன்று முள்ளியவளையால் சென்றீர்களாயின் 100 மீற்றர் தூரத்தில் இறந்த ஆத்மாக்களின் கல்லறைகள் உடைக்கப்பட்டதுடன் உடைக்கப்பட்ட இடத்தில் புத்த பெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உலகத்தின் கீழ்த்தரமான மிலேச்சத்தனமாக காண்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை மகிந்த ராஜபக்ச மட்டுமே செய்வார் என்பதை ஒவ்வொரு பிரஜைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று காணமல போனேரது பிரச்சனையாக இருந்தலும் சரி தமிழ் மக்களின் உரிமைக்கான பிரச்சனையாக இருந்தாலும் சரி அதனை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு செய்தாலும் வவுனியா பிரஜைகள் குழு செய்தாலும் ஒரே முகங்களையே காண முடிகின்றது. ஆனால் எமது உறவுகள் இதனை உணர்ந்து பெரும் விருட்சமாக அலை அலையாக ஜனநாயக ரீதியான போராட்டங்களில் கலந்த கொள்வதின் ஊடாகவே இலங்கை அரசுக்கு அழுத்தத்தினை கொடுக்க முடியும் என தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply