அரசியல் உலகில் பல ரகசியங்களை தன் விசாரணைப் பத்திரிக்காவாத அணுகுமுறயுடன் அம்பலப்படுத்தும் இதழ் டெஹெல்கா என்பது அறியப்பட்ட ஒன்றே. அதன் நிறுவனர்களில் ஒருவர்தான் தருண் தேஜ்பால்.
ஆனால் தற்போது டெகெல்கா எடிட்டரான தருண் தேஜ்பால் மீதே ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது.
அந்த பத்திரிக்கையில் பணியாற்றும் பெண் நிருபர் ஒருவர் தருண் தேஜ்பால் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக அதிர்ச்சிதரும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
டெஹெல்கா ஆசிரியர் தன்னிடம் மிக அசிங்கமாக நடந்து கொண்டார் அது மிகவும் மோசமான பாலியல் தீய நடத்தையாகும் என்று அவர் வர்ணித்துள்ளார்.
என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் இந்தப் பெண் நிருபருக்கு நெருங்கிய நபர் கூறுகையில்,
“சில காலங்களாகவே இந்த பலையல் துன்புறுத்தல் நடைபெற்று வருகிறது. இந்தப் பெண் எடிட்டரின் மகள்போன்றவர். அப்படி கூறியும் கெஞ்சியும் தேஜ்பால் விடவில்லை. தொந்தரவு ஒருநாள் நடந்தது பிறகு அடுத்த நாளும் தொந்தரவு தொடர்ந்தது” என்று கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட தருண் தேஜ்பால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும் டெஹெல்கா எடிட்டர் பதவியிலிருந்து தான் 6 மாதம் விலகுவதாகவும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
















