பாப்பரசருடன் கோத்தபாய சந்திப்பு; சிறிலங்கா அரசு உலகின் கவனத்தை திசை திருப்ப முயற்சியா?

Gotapopeகத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் பிரான்சிசை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சந்தித்து, சிறிலங்கா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

வத்திக்கானில் நேற்று முன்தினம், பார்வையாளர் அரங்கில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ச, வத்திக்கானுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, இத்தாலிக்கான சிறிலங்கா தூதுவர் பேனாட் குரே, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே ஆகியோர், பாப்பரசர் பிரான்சிசை சந்தித்தனர்.

இதன்போது, பாப்பரசரை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சார்பாக கோத்தாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து, வரும் மார்ச் மாதம் பாப்பரசர் பிரான்சிஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று றோமுக்கான சிறிலங்கா தூதுவர் பேனாட் குரே தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடும் நடவடிக்கை எடுக்க மேற்குலக நாடுகள் தயாராகி வரும் நிலையில், அந்தக் காலகட்டத்தில், பாப்பரசரை சிறிலங்காவுக்கு அழைத்து, உலகின் கவனத்தை திசை திருப்ப சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: , , ,

Leave a Reply