முரளிக்கு எதிராக கண்டன தீர்மானம்

muraliஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு எதிராக சாவகச்சேரி நகர சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சாவகச்சேரி நகரசபையில் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் முத்தையா முரளிதரன் வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்ததார்.

இதன்போது பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் காணாமல்போயினர் பலர் கொல்லப்பட்டனர். அவை அவருக்கு தெரிய வாய்ப்பில்லை.

இந்தநிலையில் முரளிதரன் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் முரளிதரன் வடக்கில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் போது எதிர்ப்பை வெளியிடுவதென்றும் சாவகச்சேரி நகரசபை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துணுக்காய் பிரதேச சபையிலும் முரளிதரனுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுநலவாய மாநாட்டிற்காக வந்திருந்த கமரூன் முரளிதரனை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது வடக்கு மக்கள் சுதந்திரமாக வாழ்வதாகவும் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது அவரை திசை திருப்பவே ஆர்ப்பாட்டங்கள் ஒரு நாளுக்கு மட்டுமே நடைபெற்றது.

என்றும் முரளிதரன் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து கண்டனங்கள் தொடர்ந்தும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply