ஓவரா ஆட்டம் போட்டா நீ காணாமப் போயிடுவே! விஜய் சேதுபதிக்கு விழா மேடையில் எச்சரிக்கை!

vijay_sethupathiஇதற்குத் தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து ரிலீசாகப் போகும் படம் தான் பண்ணையாரும் பத்மினியும். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பிரபல டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், ரெண்டு படங்கள் ஹிட்டான உடனே சினிமாவையே கண்டுபிடிச்ச மாதிரி இப்ப உள்ள ஹீரோக்கள் பேசுறாணுங்க.. என்று காட்டமானார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

இன்னைக்கு காலையில தினத்தந்தி பேப்பரை பார்த்தப்போ நாளு பக்கத்துக்கு சினிமா விளம்பரங்கள் இருந்துச்சு. அதைப் பார்க்கிறப்போ மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அந்த வகையில் பார்த்தா தமிழ்சினிமா ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இந்த அரசாங்கம் சினிமாவை மிகச் சுதந்திரமாக விட்டுருக்கிறது.

ஒரு ஹீரோன்னா அவன் இப்படித்தான் இருக்கணும், இப்படித்தான் நடக்கணும்கிற இலக்கணத்தை இந்தப் படத்தோட ஹீரோ விஜய் சேதுபதி மாற்றி வருகிறார். அதற்கு காரணம் அவரோட எளிமை. விஜய் சேதுபதி இப்படியே எளிமையா இருந்தா தப்பிச்சார். மாறிட்டார்னா மகனே நீ காணாமப் போயிடுவே

ஏன்னா இப்போ உள்ள நெறைய ஹீரோக்கள் ஒரு ரெண்டு படம் ஹிட்டான உடனே என்னமோ அவங்க தான் இந்த சினிமாவை கண்டிபிடிச்சது மாதிரியே பேசுறாணுங்க. நெறைய இயக்குநர்களும் அப்படித்தான் இருக்காங்க. ஆனா இந்தப் படத்தோட இயக்குநர் ஒரே ஒரு தடவை தான் என்னோட வீட்டுக்கு வந்திருந்தார்.

அப்போ அவரோட படத்துல உள்ள ஒரு பாட்டுக்கு என்கிட்ட சில அட்வைஸ்களை கேட்டார். ஒரு பாட்டுக்காக கூட ஒரு டைரக்டர் இன்னொரு டைரக்டரை தேடி வர்றதை நெனைக்கும் போது அது எனக்கு ஆச்சரியமா இருந்தது. இதுக்காகவே இந்தப்படத்தோட டைரக்டர் அருண்குமார் பெரிய டைரக்டர் தமிழ்சினிமாவுல இருப்பார். அவரை நான் பாராட்டுறேன்.

இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டரை ஆளைப் பார்த்தா காத்தடிச்சு பறந்து போற மாதிரி இருப்பான். ஆனா ரொம்ப டேலண்ட்டான ஆள். தமிழ்சினிமாவுக்கு இன்னொரு இளையராஜா தான். இதை நான் உண்மையாத்தான் சொல்றேன். ஏன்னா இளையராஜா பாட்டுகளை ஒரு தடவை கேட்டாலே அது மனசுக்குள்ள உடனே நிக்கும். அதேமாதிரி தான் இந்த மியூசிக் டைரக்டரோட பாட்டுகளை கேட்டப்போ மனசுக்குள்ள நிக்குது. அதேமாதிரி இந்தப் படமும் ஹிட்டாகும்.
இவ்வாறு ஆ.வி.உதயகுமார் பேசினார்.

நீங்க சொல்லிட்டீங்க ஆனா எந்த ஹீரோ கேக்குறாங்க

Tags: ,

Leave a Reply