ஒரு காலத்தில் மிகவும் ஸ்டைலாக செழித்து வளர்ந்த உங்கள் முடியை, மோசமான நிலையில் பார்க்க உங்களுக்கு எப்பொழுதும் சகிக்க முடியாததாக இருக்கும். ஏனெனில், அந்த ஆரோக்கியமான மற்றும் அழகிய முடி உங்கள் அழகுக்கு மணிமகுடமாக இருந்திருக்கும். அழகிய முகவெட்டும், வசீகரமான உடல் கட்டும் உடைய ஒரு பெண்ணை, பிரச்னைக்குரிய தலைமுடியுடன் கற்பனை செய்து பாருங்கள். பெரும்பாலானவர்கள் முதலில் கண்டறிவது சரியில்லாத விஷயங்களையே!
இது போன்ற சோர்வான, உயிரோட்டமில்லாத, மெல்லிய முடி மற்றும் பல்வேறு வகையான தலைமுடி தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் வழிமுறைகளை இங்கே நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த வழிமுறைகள் உறுதியான, மொத்தமான மற்றும் பயன்படுத்த மிகவும் ஏற்ற வகையிலான தலைமுடியை உங்களுக்கு உருவாக்க மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
இந்த வழிமுறைகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. அதே சமயம், இவை குறைந்த செலவில் செய்யக் கூடியவையாகவும் உள்ளன. இதற்கு பியூட்டி பார்லர்களில் செலவிடும் வகையிலான அதிக பணமோ அல்லது நேரமோ இந்த வழிமுறைகளுக்கு தேவையில்லை என்பது நல்ல விஷயம் தானே!
தலைமுடியை பாதுகாக்கும் இந்த வழிமுறைகளை தெரிந்து கொண்டு, அவை உங்களுடைய தலைமுடியில் எப்படிப்பட்ட நல்ல வகையான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை கண்டறியுங்கள்.
சூடான எண்ணெய் சிகிச்சை
பொருட்கள்:
ஏதாவதொரு இயற்கை எண்ணெய் – ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்
வழிமுறை:
1. மேற்கண்ட எண்ணெய்களை சற்றே சூடுபடுத்த வேண்டும்.
2. பின் அதனை தலையில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
3. ஒரு இரவு முழுவதுமோ அல்லது ஒரு மணி நேரமோ அப்படியே விட்டு விட்டு, அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும்.
தேங்காய் பால் சிகிச்சை
பொருட்கள்:
தேங்காயை உரித்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
வழிமுறை:
1. தலையில் சிறிதளவு தேங்காய் பாலை எடுத்து மசாஜ் செய்வது போல் தடவி விட்டு, மீதமுள்ளதை முடியின் கால்கள் வரை செல்லுமாறு செய்யவும்.
2. 1-2 மணிநேரங்களுக்கு அப்படியே விட்டு விட்டு, பின்னர் முழுமையாக கழுவி விடவும்.
கடுகு மற்றும் மருதாணி இலைகள்
பொருட்கள்:
கடுகு எண்ணெய் மற்றும் மருதாணி இலைகள்
வழிமுறை:
1. கடுகு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் சிறிது மருதாணி இலையை போட்டு வரவும். அது எண்ணெயுடன் நன்கு சேரும் வரை நன்கு கலக்க வேண்டும்.
2. சுத்தமான துணியை கொண்டு இந்த எண்ணெயை வடிகட்டவும்.
3. பின் இந்த எண்ணெயைக் கொண்டு தினமும் தலையில் மசாஜ் செய்து வந்தால், முடியானது நன்கு வளரும்.
எலுமிச்சை சிகிச்சை
பொருட்கள்:
சர்க்கரை, எலுமிச்சை சாறு, தண்ணீர்
வழிமுறை:
1. பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை, சர்க்கரையுடன் சேர்த்து தண்ணீர் உள்ள பாத்திரத்தில் கலக்கவும்.
2. பின் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த சாற்றை தடவி விட்டு, 15 நிமிடங்களுக்கு காத்திருக்கவும்.
3. பின்னர் அந்த பகுதியை நன்றாக தேய்த்து,குளுமையான நீரில் சுத்தமாக அலசி கழுவவும்.
கடலை மாவு மற்றும் தயிர் கலவை
பொருட்கள்:
கடலை மாவு, மஞ்சள் தூள், தயிர்
வழிமுறை:
1. மஞ்சள் தூள், கடலை மாவு மற்றும் தயிரை சேர்த்து ஒரு பேஸ்ட் தயார் செய்யவும்.
2. பின் இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விட்டு, அதனை உலர வைக்கவும்.
3. பேஸ்ட் காய்ந்தவுடன், அந்த இடத்தை தண்ணீர் சேர்த்து மென்மையாக தேய்த்து கழுவவும்.
4. நன்கு கழுவியவுடன், அந்த இடத்தை சற்றே ஈரப்பதமாக வைக்கவும்.
எலுமிச்சை மற்றும் தேன்
பொருட்கள்:
எலுமிச்சை மற்றும் தேன்
வழிமுறை:
1. எலுமிச்சை மற்றும் தேனை சரிசமமாக எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
2. இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விட்டு, 10-15 நிமிடங்கள் காத்திருக்கவும்.
3. குளிர்ச்சியான தண்ணீரில் கழுவவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை
பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை
வழிமுறை:
1. தேங்காய் எண்ணெயை, எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலக்கி, இந்த கலவையை தலையில் தடவவும்.
2. 10-15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர், நன்கு நீரில் அலச வேண்டும்.
நெல்லிக்காய் சிகிச்சை
பொருட்கள்:
நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
வழிமுறை:
1. தேங்காய் எண்ணெயில் சிறிது நெல்லிக்காய் துண்டுகளை போட்டு, அவை கருமை நிறமடையும் வரையிலும் வேக வைக்கவும்.
2. பின் இதனை தலையில் தடவி விட்டு, பின்னர் தலைமுடியை சுத்தமாக கழுவி விடவும்.
















