வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரால் கூட்டுறவு வங்கி திறந்து வைப்பு

vav-vikவவுனியா மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் கீழான வவுனியா நகரப் பகுதியில் கூட்டுறவு வங்கி ஒன்றினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இன்று (23) மதியம் திறந்து வைத்தார்.

கூட்டுறவு வங்கியின் மூலம் மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் எனும் அடிப்படையில் கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முகமாக இக் கிராமிய வங்கி பசார் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

முன்னதாக குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து முதலமைச்சரையும் விருந்தினர்களையும் பிரதான வீதி வழியாக அழைத்து வந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது வவுனியா வர்த்தகர் சங்கம், நகர பள்ளிவாசல் நிர்வாகம் ஆகியோரும் முதலமைச்சரை கௌரவித்ததுடன் பள்ளிவாசலுக்குச் சென்று முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து கூட்டறவு வங்கியினை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடாவை வெட்டி திறந்து வைத்ததுடன் சேமிப்பினையும் ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதரராரலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள், பணியாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
vav-vik1

vav-vik2

vav-vik3

vav-vik4

Tags: ,

Leave a Reply