இலங்கையில் இனக் குரோதத்தை ஏற்படுத்த வந்தவரா ஜெயபாலன்? – எஸ்எம். வரதராஜன்

question-mark‘என்னில் டியூ வைத்திருந்த நம்பிக்கையை நாட்டின் தலைமை தனது அமைச்சர்களில் வைக்கவில்லையே’

ஜெயபாலன் அண்ணர் அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் ஆச்சரியத்துக்குரிய ஒன்றாகும் என்று ஒரு ஆரம்ப வசனமாக நான் இதனை எழுதவில்லை.இன்று யாருக்கும் அது புரிந்த ஒன்று!

1997 இல் நான் சுயாதீன தொலைக்காட்சி நிலையத்தின் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்த போது தமிழ் சிங்களப் புத்தாண்டு தின நிகழ்ச்சி ஒளிபரப்பிற்கு (நேரடி) தமிழில் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைத்தேன். அவ்வேளை ஜெயபாலன் அண்ணர் இலங்கையில் வந்திருந்தார்.

ஒரு கவிதையைத் த் தாருங்கள் நான் அதை இசை யமைப்பித்து காட்சிப் படுத்தி ஒழி பரப்ப விரும்புகிறேன் என்று கேட்டேன். இரண்டு நாட்களுள் கவிதை கைக்கு வந்தது.

‘போர் எனும் இருள் தகர..

புலர்கின்ற சூரியனே,..

புலர்கின்ற சூரியனை..

குளிர்விக்கும் தாமரையே..

மானுடம் வெல்கவென்று…’ இப்படித்தொடரும்

எஸ் கணேஷ்ராஜ் இதற்கு அருமையாக இசையமைத்தார்..

ஐ ரி என் தலைவர் டியூ குணசேகர பாடல் நன்றாயிருக்கிறது ஆகவே கவி வரிகளும் நன்றாக இருக்க வேண்டும் என -எமது வாராந்தக் கூட்டத்தில் எனக்குச் சொல்லி அதன் வரிகளை மொழி பெயர்த்துத் தரும்படி கேட்டார். படித்துவிட்டு போரின் அவலத்தை உணர்ந்தவன் ஒருவனாலேயே இப்படிக் கவிதை எழுத முடியும் என்றார்.

தமது வரிகளுக்கு இசையமைத்த கணேஷை தமது நண்பனாகக் கொள்ள ஜெயபாலன் ஆசைப்பட்டதுடன் அவரை பிரபலமாக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார். இப்படி ஒரு இசையமைப்பாளன் இந்தியாவில தாண்டா பிறக்கணும் என்றார்!

அவரது கலானுபவமும் நேயமும் அது!

வடக்கிலும் கிழக்கிலும் போர் காரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கொழும்பிலும் பாதுகாப்புக் கெடுபிடி .இந்த நேரத்தில் இலங்கையில் இல்லாத ஒருவரைக் கொண்டு அதுவும் அரசியல் சமூகப பின்னணிகளில் நிறைந்த தளம் அமைத்த ஒருவரைக் கொண்டு கவிதை எழுதி…இது தேவைதானா என்று அரச ஊடகங்களில் உள்ள ஆலோசகர்களே கேட்பார்கள்..!

எந்த அரச ஊடகங்களிலும் இல்லாமல் முதன் முதல்யாழிலிருந்து கொழுப்பு வந்திருந்த கம்பன் கழகத்தினரை மகா சிவராத்திரிக்கு (ஐ ரி என் தான் சிவராத்திரிக்கு முதன் முதலாக இரவு நிகழ்ச்சி நேரடியாக ஒளி பரப்பியது என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன்) அழைத்து இரண்டு மணி நேரம் சுழலும் சொற்போர் நடத்திய போது ‘அவர்களை ஏன் அழைத்தீர்… அவர்கள்… அவர்களின் ஆட்களாம்..பிரச்சினை வரலாம்… என்று என்னை வெருட்டி ஆலோசனை வழங்கிய வேறு ஊடகங்களின் அதிகாரிகளும் ஆலோசகர்களும் பின்னர் அதே கம்பன் கழகத்துடன் செக்கெனப் பிடித்திருந்து விருதுகளும் மாலைகளும் பெற்றுக்கொண்டனர்.

கம்பன் கழகத்தின் சுழலும் சொற் போராக இருக்கட்டும். ஜெயபாலனின் கவிதையாக இருக்கட்டும் இரண்டையும் தனி ஒருவனாக நான் துணிந்து செய்வதற்குக் காரணமாக இருந்தவர் முன்னாள் ஐ ரி என் தலைவரும் இன்றைய அமைச்சருமான இன்றும் எனக்கு ஒரு தந்தை போலவும் நண்பராகவும் திகழும் டியூ குணசேகர அவர்களே! புரிந்துணர்வு என்பது இதுதான் என்றே என்னால் விளக்கமுடியும்!

‘நான் எதோ நல்ல விசயம் தான் செய்கிறேன் என்கின்ற நம்பிக்கை என் தலைவருக்கு இருந்தது. நாட்டின் தலைமைக்கும் தனது அமைச்சர்கள் மீது இத்தகைய நம்பிக்கை வந்தால் ஜெயபாலன் போன்றவர்களின் கைது விடயங்கள் சுலபமாகத் தீர்க்கப்படலாம்!’

சுழலும் சொற்போர் மறுநாள் – தலைவர் எனக்குச் சொன்னது ‘எனக்கு நிகழ்ச்சி விளங்கவில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் நாங்கள், நம் ஆட்கள் சண்டை பிடிப்பதை விடவும் நன்றாகச் சண்டை பிடித்தார்கள்.. அது சரி என்ன பேசினார்கள்…’ என்று கேட்டார். என்னுடன் அருகிலிருந்த பொது முகாமையாளர் பேர்டி கலகிடியாவ – கம்பராமாயணம் பற்றி பேசினார்கள் என்றார். நான் விளக்க முன்னர். அதற்குத் தலைவர் டியூ, அதுக்கு உவ்வளவு சண்டை பிடி க்கனுமா..? ..ராமாயணம் பற்றி உவ்வளவு விடயங்கள் வைத்திருகிறார்களா? எனக்கு நேற்றும் இன்றும் எமது ஆட்கள் சிலர் ‘போன்’ பண்ணினார்கள்.. இரவில் நீ உனது நிலைய ஒலி பரப்பைப் பார்ப்பதில்லையா? அவங்கள் இனவாதம் புலி அரசியல் எல்லாம் பேசினாங்களோ. தெரியாது.’ என்று ! நான் சொன்னேன் உனக்கு விளங்கியதா?, என்று…. சொல்லிவிட்டேன்..’ என்று சொல்லி இப்படி நல்ல நிகழ்சிகளை செய். நான் இருக்கும் வரை நீ ஒன்றுக்கும் யோசியாதே.. இன ஐக்கியத்திற்கு நீ என்னவெல்லாம் செய்யலாம் என்று நினைக் கிறியோ பேயைக் கொண்டுவந்தும் அதனைச் செய்’ என்று பாராட்டினார்.

சமாதான ஒப்பந்த காலத்தில் ,ஜெயபாலன் அண்ணரை நான் ‘மக்களுடன் மின்னல்’ என்ற நிகழ்ச்சியை கிளிநொச்சியில் தயாரிக்கும் நாளன்று கிளிநொச்சி நகரத்தில் வைத்துக் கண்டேன். கடை ஒன்றுக்கு முன்னால் நாங்கள் நின்ற பொழுது அவ்வழியால் வந்த இவர் என்னைக் கண்டுவிட்டு என்னை நெருங்கினார்….’ என்ன நீங்கள் இங்க நிக்கிறியள்..?’ என்றேன். ‘இது என்ற ஊர். நீங்கள் எல்லாம் வரலாம் என்றால் நான் ஏன் வரக்கூ டாது..? ‘ என்றார். -நாங்கள் வந்த காரணத்தை அறிந்தார். பின்னேரம் ஒளிப்பதிவு. தமிழ்செல்வனுடன் மக்களும் வருவார்கள். கேள்வி கேட்பார்கள். என்று சொன்னேன். மக்கள் என்ன கேள்வியும் கேட்கலாமோ..? என்று நகைச் சுவையாகக் கேட்டார். அப்படிச் சொல்லித்தான் வந்துள்ளோம் என்றேன். ‘அப்பா நானும் உங்களோட வாறன்..’ என்று சொல்லி, மாலை கலாசார மண்டபத்திற்கு வந்துவிட்டார்.

ஒளிப்பதிவு ஒழுங்கு வேலைகள் நடைபெற்றக் கொண்டிருக்க ஜெயபாலன் என் நண்பர் என்பதால் என்னுடனேயே வந்து நின்று கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு ஆயத்த மாக வந்திருந்த தமிழ்ச் செல்வன் என்னிடம் கேட்டார்’ உவரும் உங்களுடனோ வந்தவர்’ என்று. நான் சொன்னேன் அவர் எப்பவோ வந்திருக்க வேண்டும். இன்று வீதியில் வைத்துக் கண்டோம்.. தாமும் வரப்போகிறேன் என்றார்’ என்றேன். தமிழ்ச் செல்வன் என்னிடம்’ அவரும் கேள்வி கேட்கிறாரோ’ என்றார். நான் இல்லை என்றாலும் ஓம் போல என்றாலும் ஜெயபாலன் கேள்வி கேட்கலாம் என்று எவருக்கும் புரியும். எத்தனை கேள்வி என்ன கேள்வி என்று பாருங்கோ என்றார். எனக்கு தர்மசங்கடமான நிலைமை. இதனை நான் ‘மின்னல்’ தொகுப்பாளர் ரங்காவுக்குப் போய்ச் சொன்னால் அது பெரிய ‘இடி’யாகிவிடும்! ;’ நீங்கள் தான் ஐயா இவங்களை இங்க கூட்டிவாறது..’ என்று ரங்கா சொன்னால்.. (.சொல்லிக்) குழப்பமாகிவிடும். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..! நிகழ்ச்சி ஒளிப்பதிவும் தொடங்கப் போகிறது!

அங்கு எங்களுக்கு ஒருங்கிணைப்பு உதவியாக நின்று கொண்டிருந்த தயா மாஸ்டரிடம் போனேன். பள்ளிக் காலத்திலிருந்து அவர் என்னுடன் நட்பானமையினால் துணிந்து வெளிப்படையாக நான் பல விடயங்களைக் கதைத்துள்ளேன். (நான் மட்டு மல்ல பல ஊடகவியலாளர்களும் அவருடன் அப்படித்தான்) ‘அண்ணை, இவர் ஜெயபாலன் ஏன் வந்தாராம், என்ன கேட்பாராம் என்று தமிழ்ச் செல்வன் கேட்கிறார். ஜெயபாலனிடம் எப்படிக் கேட்பது -அந்த ஆள் என்னை என்ன நினைக்கும் – மக்களுடன் மின்னல் என்று விட்டு இதோடா நடத்திறீங்கள் என்று என்னை வாழ் நாள் முழுக்க கடிக்கும்., என்னண்ணை செய்யிறது’ என்றேன்.

மக்களுடன் மின்னல்- என்றால் கேட்கிறவைக்குப் பதில் சொல்றதுதானே.. ஜெயபாலன் கேட்டால் சொல்லேலாதாமோ…? ஜெயபாலன் கேட்டால்.. ஏதும் தமிழ் முஸ்லிம் உறவைப் பற்றிக் கேட்கும்.. ஏன் சொல்லட்டுமன். நீ சொல் அவரைக் கேட்பது முறை அல்ல என்று சொல்’ என்றார். (தயா மாஸ்டர் இதனைப் படித்தால் சிரித்துக் கொள்வார் என நினைக்கிறேன்)

எதற்கும் நான் ஜெயபாலனை அணுகி.. ‘அண்ணை எத்தனை கேள்வி கேட்கப் போகிறீர்கள் ..’ என்று கேட்டேன் . ‘ஏன் ..நேரம் காணா தோடா… நான் ஒன்று கேட்கிறேன்.. இடைக்கால நிருவாகம் அதில முஸ்லிம்கள் தொடர்பான சில விசயங்கள் பேசக் கிடக்கு என்றார் பார்க்கலாம்…?

இவரைப் போய் …………?

Tags: ,

Leave a Reply