தமிழீழ விடுதலைப் புலிகளும், மக்களும் வருடாவருடம் அனுஸ்டிக்கும் மாவீரர் தினம், எதிர் வரும் 27 ஆம் திகதியும் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்கும் முனைப்புக்கள் பல தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகின்றது
இந்த நிலையில் மன்னார் பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர் (கோபுரம்) ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக்கொடியான ‘புலிக்கொடி’ ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தகவலறிந்த படைத்தரப்பினர் இன்று திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துரையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொடியினை அகற்றியுள்ளனர்.
தற்போது மேலதிக விசாரனைகளை படைத்தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இராணு புலனாய்வுத்துரையினர் குறித்த சம்பவத்தை முடிமறைத்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு இச்சம்பவத்தை மறுத்துள்ள மன்னார் காவல் துறையினர் அவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.
















