ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் புலிகளின் புகழ்பாடுதல் சட்டவிரோத செயலாம்!

warningஊடக சுதந்திரம் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பாடுதல், பெருமைபோற்றுதல் சட்டவிரோதமானதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேரடியாகவோ மறைமுகமாகவோ அவ்வாறு எவரும் நடந்துகொண்டால் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என அந்த நிலையம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாகும். இதனை அனுஸ்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பது சட்டவிரோதமான செயல் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply