தமிழ் மக்களுக்கு – குறிப்பாக இந்துக்களுக்குச் சிறப்பான மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் மட்டுமே கார்த்திகைப் பூவும் மலர்ந்து விரிந்து பலரையும் வியக்க வைக்கும்; மனதைக் கொள்ளை கொள்ளும்.
தற்போது வன்னியிலும் குடாநாட்டிலும் ஆங்காங்கே கார்த்திகைப் பூக்கள் மலர்ந்து அனைவரையும் கவர்ந்துள்ளன; ஈர்த்துள்ளன.
கார்த்திகைப் பிறையைக் கண்டவர்கள் போன்று கார்த்திகைப் பூவைக் கண்ணுற்றவர்களும் தம் வாழ்வில் வசந்தம் வீசப்போகிறது என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியில் திளைத்து நிற்கின்றனர்.
















