ஆர்யா பேச்சை தட்டாமல் கேட்கும் நடிகை

araya-poojaஆர்யாவுடன் உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா. பல நடிகைகளுடன் கிசு கிசுக்கபட்டு வரும் ஆர்யா, முதலில் கிசுகிசுக்கப் பட்டது பூஜாவுடன் தான். பல பத்திரிக்கைகள் இவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தன. ஆனால் அச்செய்திகளை மறுத்து வந்த இவர்கள் பின்னர் நடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுவந்தனர். பின்னர் ஆர்யா பல நடிகைகளுடன் இனைத்து கிசுகிசுக்கபட்டார். பூஜா முன்னனி நாயகியாக வலம் வந்தார். இயக்குனர் பாலாவின் நான் கடவுளுக்கு பிறகு பூஜா எந்த படத்தையும் ஒப்பந்தம் செய்யாமல் அவர் தாய்நாடான இலங்கைக்கு சென்றுவிட்டார். அவருக்கு திருமணம் என்றெல்லாம் செய்தி வலம் வந்தது. ஆனால் பத்திரிக்கையாளர்களோ, அவரின் திரையுலக நண்பர்களோ அவரை தொடரு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் வரும் வாரம் வெளிவரவிருக்கும் விடியும் முன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை வெகுவாக பாராட்டிய பத்திரிக்கையாளர்கள், பூஜாவின் நடிப்பையும் புகழ்ந்தனர். இந்நிலையில் அவருடன் பிரத்யேகமாக கலந்துரையாடிய சில துளிகள் இதோ…

கே: எவ்வாறு படங்களை தேர்வு செய்கிறீர்கள்?

ப: ஓர் கதை கேட்ட பின் என் நண்பன் ஆர்யாவுடன் கல்ந்தாலோசித்துவிட்டே படங்களை தேர்வு செய்கிறேன். அவர் எனக்கு சிறந்த வழிகாட்டி. ஆனால் விடியும் முன் படத்தின் கதை கேட்டவுடனே நான் நடிப்பது என முடிவு செய்துவிட்டேன்.

கே: உங்களையும் ஆர்யாவை சேர்த்து நிறைய கிசு கிசுக்கள் வந்ததே?

ப: முதலில் அவ்வாறு கிசு கிசுக்கள் வந்தபோது வருத்தமாக இருந்தது. ஆனால் அதில் துளியும் உண்மையில்லை என்பதால் அதை பொருட்படுத்துவதில்லை.

கே: ஏன் நான் கடவுளுக்கு பின் இவ்வளவு பெரிய இடைவெளி? இடையில் உங்களை தொடர்பு கொள்வது கடினமாக இருந்ததே?

ப: எனக்கு என் தாத்தா பாட்டியென்றால் உயிர். ஆகவே அவர்களுடன் நேரம் நேரம் செலவழிக்க என் தாய் நாடு சென்று விட்டேன். ஆனால் பத்திரிக்கையாளர்களுடனும், திரையுலக நண்பர்களுடனும் தொடர்பில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

கே: இனி தொடர்ந்து நடிப்பீர்களா?

கண்டிப்பாக!

அவரின் இந்த இரண்டாவது இன்னிங்கஸ் வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்

Tags: ,

Leave a Reply