சிம்பு ஹன்சிகா காதலை போல பரபரப்பாக பேசப்பட்ட இன்னொரு காதல் ஜோடி ஜெய் மற்றும் நஸ்ரியா.
என்னதான் பத்திரிகையாளர்கள் கிடுக்குபிடி போட்டு இவர்கள் காதலை பற்றி இருவரிடமும் கேள்விகளை கேட்டாலும் கொஞ்சம் கூட அலட்டிக்காமல் இதெல்லாம் வெறும் வந்ததி என்று சொல்லி வந்தார்கள்.
இதற்கிடையில் ஜெய் இந்த வதந்தி பற்றி கேள்வி பட்டால் செம காமெடியாக இருக்கிறது என்று கூறியிள்ளார்.
நஸ்ரியா பற்றி ஜெய் கூறியபோது, ” அவர் ஒரு நல்ல தோழி. அவருடைய முதல் படத்தில் அவரக்கு சுத்தமாக தமிழே தெரியாது. எனவே, டயலாக் பேச நானும் உதவியாக இருந்திருக்கிறேன். அதனால் எங்களிடையில் ஒரு நல்ல நட்பு உருவானது. ஆனால் இதை மற்றவர்கள் நாங்கள் காதலிப்பாதாக தவறாக நினைத்து இந்த வதந்திய பரப்பி உள்ளனர்” என்று கூறினார்.
பாஸ்! சினிமாவில் காதலித்து மணந்த எல்லா தம்பதியும் இப்படி ஆரம்பித்து தான் கடைசியில் காதலை ஒப்பு கொண்டுள்ளனர். நீங்க எப்படின்னு நாங்களும் வெயிட் பண்ணி பாக்குறோம்!!!
















