யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் கோரிக்கை

uk-Prime-Minister-Davidஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை நடத்தத் தவறினால், பிரித்தானிய சர்வதேச விசாரணைகளை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டால் இலங்கை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நகர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காலணித்துவ முறைமையை இலங்கை மீது திணிக்கும் முனைப்பாக பிரித்தானியாவின் கோரிக்கையை கருதக் கூடாது எனவும், பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், மனித உரிமை விவகாரங்களில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply