வவுனியாவில் சைக்கிளில் சென்ற முதியவரை மோதித் தள்ளிவிட்டு ஒடித் தப்பிய ஹயஸ் வாகனம்! முதியவர் பலி

vav-oldmanவவுனியா, குருமன்காடு காளி கோவில் வீதியில் நேற்று இரவு 7 மணியளவில் சைக்கிளில் சென்ற முதியவரை மோதித் தள்ளிய ஹயஸ் வாகனம் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.

குருமன்காடு பகுதியில் இருந்து திருநாவற்குளம் நோக்கி சைக்கிளில் சென்ற முதியவரை எதிரே வேகமாக வந்த ஹயஸ் வாகனம் மோதியுள்ளது. இதனால் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான வயோதிபரை அங்கு நின்ற இளைஞர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் செல்லும் வழியில் மரணமடைந்து விட்டதாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முதியவர் மீது மோதிய பச்சை நிற ஹயஸ்வாகனம் நிறுத்தாமல் சென்றமையால் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா போக்குவரத்து பொலிசார் வாகனத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இறந்தவர் தொடர்பான பெயர் விபரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

Tags: , ,

Leave a Reply