அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகும், வீரம் படத்தில், இதுவரை அஜித் நடித்த படங்களை விட, இப்படத்தின் கிளைமாக்ஸ், அதிக உணர்ச்சிமயமாக படமாக்கப்பட்டுள்ளதாம்.
அதோடு ´மங்காத்தா, பில்லா-2, ஆரம்பம்´ என்று தொடர்ந்து, ஆக் ஷன்கதைகளில் நடித்த அஜித், இந்த படத்தில் கிராமத்து நகைச்சுவை கதையில் நடித்துள்ளாராம்.
´அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பங்காளி´ என்று குடும்ப உறவுக்களுக்கிடையே நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்ட இப்படத்தில், ´விநாயகம்´ என்ற கேரக்டரில் கிராமத்து இளைஞனாக வேட்டியை மடித்துக் கட்டியுள்ளார் அஜீத்.
முக்கியமாக ´பஞ்ச் டயலாக்´ எதுவும் இல்லாத, இந்த யதார்த்தமான, ´வீரம்´ படத்தை எம்.ஜி.ஆரின் ´எங்க வீட்டுப் பிள்ளை´ படம் போன்று அமையவேண்டும் என்பதற்காக, ரொம்பவே மெனக் கெடுகின்றனராம்.
















