வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் விகாராதிபதியினால் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக சிறுவன் ஒருவன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் விகாராதிபதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் நன்னடத்தை சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தில் பொறுப்பேற்கப்பட்ட 21 சிறுவர்களில் நீதிமன்ற உத்தரவுக்கமைய 8 சிறுவர்கள் நேற்றைய தினம் (26) சிறுவர்களின் உறவினர்களிடம் நன்னடத்தை சிறுவர் பாதுகாப்பு நிலைய பொறுப்பதிகாரி தி.மனோகரராஜா அவர்களால் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன் போது சிறுவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளும் அச் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது.
















