மாவீரர் தின சுவரொட்டிகளுடன் களுவாஞ்சிக்குடியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நேற்று இரவு 9 மணியளவில் கைதுசெய்யப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைதுசெய்யபட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர், 16 – 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனத் தெரிய வருகிறது.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பாதுகாப்புத் தரப்பினரால் அகற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















