இனியாவுடன் வேளச்சேரியில் ஊர் சுற்றும் சரத்குமார்?

Iniyaஅரசியலில் தினமும் அறிக்கை விடுகிறார். ஆனால் எப்போதாவது தான் சரத்குமாரை சினிமாவில் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்டவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் ஹீரோவாக தலை காட்டுகிறார். அந்தப்படத்தின் பெயர் வெளச்சேரி.

இந்தியாவில் இதுவரை 586 போலி என்கவுண்டர் நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கவுண்டர் நடைபெற்றுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கவுண்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நடைபெறும் பெருங்குற்றங்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்கவுண்டர் தேவை என போலீஸ் தரப்பில் வாதாடப்பட்டுக் கொண்டு வருகிறது. என்கவுண்டர் மனித உரிமை மீறலா? இலையா? என்ற விவாதம் தான் இந்த வேளச்சேரி படமாக வளர்கிறது.

படத்தில் சரத்குமார் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக நடிக்க, இனியா வழக்கறிஞராக நடிக்கிறார். இனியா மனித உரிமை ஆர்வலராக இருந்து கொண்டு என்கவுண்டரை எதிர்ப்பதும் சரத்குமார் ரௌடிகளைப் போட்டுத் தள்ளுவதுமாக கதை விறுவிறுவென பின்னப்பட்டுள்ளது.

என்கவுண்டர் விவாதங்களுக்கு வேளச்சேரி ஒரு தீர்வைச் சொல்லும் படமாக அமையும். மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் வேளச்சேரி படத்தில் சரத்தின் ஆக்‌ஷன் எபிசோடுகள் ஹாலிவுட்டுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்னதான் ஹாலிவுட்டுக்கு இணையாக சண்டைக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ஆளும் கட்சிக்கு ஆதவராக படம் இல்லையென்றால் அவ்ளோதான்.

Tags: , ,

Leave a Reply