மொரீசியசில் புலிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

ltte-flagமொரீசியசில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கப்பட்டு மாவீரர் தினமான இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது:-

மொரீசியஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. போரில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் போராளிகள் என 1,46,629 பேரை நினைவு கூறும் வகையில் இந்தத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. மொரீசியசின் பின் பேசின் ரோசாஜிலி என்னும் நகரில் இந்த நினைவுத் தூபி நிறுவனப்பட்டுள்ளது.

மாவீரர் தினமான இன்று இந்த நினைவுத் தூண் திறக்கப்பட்டுள்ளது. பின் பேடிஸ் நகரின் மேயர் அன்ட்ரே ட்ரைசன்ட் இந்த நினைவுத் தூணை திறந்து வைத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை மொரீசியஸ் புறக்கணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply