அனோல்டின் சகோதரியின் வீட்டின் மீதும் தாக்குதல்
வடமாகாண விவசாய துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வீட்டுக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
யாழ்.திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டின் மீதே தாக்குதல் நாடாத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் அவரது வீட்டு யன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில். இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டு வாசலில் இரண்டு மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் வீட்டு (கேற்) வாசலில் நின்று வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர்.
மாவீரர் நாளை ஒட்டி மர நடுகை நிகழ்வை நடந்தியதன் பின்னனியிலையே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என தெரிவித்தார்.
இதேவேளை பாசையூர் அந்தோனியார் ஆலயத்துக்கு அருகில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் அனோல்டின் சகோதரியின் வீட்டின் மீதும் அதிகாலை மூன்று மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் கற்களால் வீட்டின் மீது தாக்குல் நடாத்தி கண்ணாடிகளை சேதப்படுத்திவிட்டு தப்பியோடி உள்ளனர். இதே போன்று மேலும் சில உறுப்பினர்களது வீடுகளிற்கும் கல்வீச்சுக்கள் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
















