கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்காமை கவலையளிப்பதாக பிரித்தானியா மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் இந்தியாவுக்கான புதிய பிரதி உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்ற பாரட் ஜோசி நேற்று செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தார். அதன்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளக் கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. எனினும் அவற்றையும் பொருட்படுத்தாது, மாநாட்டில் கலந்து கொண்டு மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் இவ்வாறான செயற்பாட்டை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு செய்ய முடியாமல் போனமை வருத்தமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















