இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்படும் – இந்தியா

indian_flagஇலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கைக் கடற்படையினருக்கு பயிற்சி வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைத் தளபதி சீப் அட்மிரல் டி.கே. ஜோஷி ஜனாதிபதி மஹி

ந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கைக் கடற்படையினருக்கு பயிற்சி வழங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் இந்திய அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நான்காண்டு தொழில்நுட்ப பட்டப்படிப்பை இலங்கை கடற்படையினருக்கும் வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திர வலயத்தின் கடற் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கும் இந்திய கடற்படைத் தளபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply