இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் பலர் பிரபாகரனை கொல்ல வேண்டுமென விரும்பினர் – பசில் ராஜபக்ஷ

basilaஇன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்ய வேண்டுமென விரும்பியதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழர் உரிமைகளுக்காக இன்று கண்ணீர் வடிக்கும் பல நாடுகள், புலிகளை இல்லாதொழிக்க வேண்டுமென விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும், மனிதாபிமான மீட்புப் பணிகளின் போதும் எவ்வாறு செயற்பட்டோம் என்பதனை மறந்து விட்டு சில நாடுகள் தற்போது செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பிரபாகரனை தீர்த்துக்கட்ட வேண்டுமென விரும்பிய சில நாடுகள் இன்று முதலைக் கண்ணீர் விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு ஆற்றிய சேவையை அனைவரும் மதிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய பிரதமரினால் வட அயர்லாந்திற்கு விஜயம் செய்ய முடியாது எனவும், இலங்கையின் வடக்கிற்கு விஜயம் செய்ய எவ்வித சிக்கல்களும் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை 20 ஆண்டுகளுக்கு ஆளப்போவது ராஜபக்சக்களே – பசில் ராஜபக்ச

வடக்கில் சில குறைபாடுகள் இருக்கலாம், தாமதங்களும், வடக்கில் இன்னும் செய்ய வேண்டியவையும் இருக்கலாம்.ஆனால், வடக்கிலுள்ள மக்களுக்கு சிறிலங்கா அதிபர் செய்தவற்றை மதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாம் அவர்களுக்கு அமைதியையும், ஜனநாயகத்தையும் கொண்டு வந்துள்ளோம். எத்தகைய பிரச்சினைகள், வேறுபாடுகள் என்றாலும், அவற்றை தீர்க்கும் பொறுப்பு எமது கைகளில் தான் உள்ளது. அதற்காக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

எதிர்க்கட்சிகள் இங்கு அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த நாட்டை ஆளப்போவது ராஜபக்சக்கள் தான். அது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply