பிரபாகரனின் வீடுகள் பறிமுதல் செய்யப்பட உள்ளன

prabakaran-houseதமீழழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடுகள் பறிமுதல் செய்யப்பட உள்ளன. உரிமை கோரப்படாத சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரபாகரனின் இரண்டு வீடுகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட உள்ளன. யுத்த காலத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இலங்கை புள்ளி விபரத் திணைக்களம் மதிப்பீடுகளை ஆரம்பித்துள்ளது.

யுத்தம் காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் உமைச் சேதங்கள் தொடர்பில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. உரிமை கோரப்படாத சகல சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரத் திணைக்கள ஆணையாளர் டி.சீ.ஏ. குணவர்தன தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நாட்டை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் மக்களின் உரிமை கோரப்படாத சொத்துக்களும் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட உள்ளன. வன்னி மற்றும் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள இரண்டு பிரபாகரனின் வீடுகள் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளன.

Tags: , , ,

Leave a Reply