நியூயோர்க்கில் இடம்பெற்ற ரயில் விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயோர்க்கின் புரொனெக்ஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பதினொரு பேரின் நிலைமை கவலைக்கிடம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரயில் வேகமாக பயணம் செய்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். வளைவுப் பாதையில் தடம்புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வளைவுப் பாதையில் வேகமாக சென்றதனால் ரயில் பெட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
















