வவுனியா அட்டமஸ்கட சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் மேலும் ஐந்து சிறுவர்கள் முறைப்பாடு

monk2வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்ல மதகுருவாகிய கல்யாணதிஸ்ஸ தேரருக்கு எதிராக மேலும் ஐந்து சிறுவர்கள் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுவன் ஒருவன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வவுனியா அட்டமஸ்கட கல்யாணதிஸ்ஸ தேரர், மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் சிறுவர் இல்லத்தின் பொறுப்பதிகரி ஆகிய கல்யாணதிஸ்ஸ தேரருக்கு எதிராக ஐந்து சிறுவர்கள் இன்று முறைப்பாட்டினை செய்துள்ளனர். முறைப்பாடு செய்த சிறுவன் ஒருவன் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

எம்மை படிப்பதற்காக அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் கொண்டு சென்று சேர்த்து விட்டார்கள். ஆனால் அங்கு எமக்கு கல்வி கற்க கூடிய வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை. தினமும் தோட்ட வேலை, கல் உடைத்தல் என வேலை வாங்கப்பட்டோம். கையில் கிடைக்கும் கொட்டன்கள் மற்றும் மூங்கில் தடிகளால் அடித்ததின் காரணமாக தலையில் பரிய காயங்கள் ஏற்பட்டன. அதற்கு மருந்துகள் கூட கட்டப்படுவதில்லை. தலை யில் ஏற்பட்ட காயம் துர்நாற்றம் வீசிய போது என்னை வெயிலில் நிற்க விட்டு அந்த புண் ஈரம் காய்ந்ததும் உள்ளே கூப்பிட்டார். நான் அங்கிருந்து வீட்ட ஓட முற்பட்ட போது என்னை பிடித்து இதைவிட இருட்டறை ஒன்றுக்குள் எம்மை விட்டு வெருட்டினார்கள் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வாரமும் ஒரு சிறுவன் முறைப்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply