வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை கமநல சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
வரவு செலவுத் திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நேற்று மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த விவசாயிகள் கோவணம் அணித்து கொழும்பில் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.
கோவணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
















