சீனாவில் குழந்தைப் பேறு தொடர்பாக நடத்தப்பட்ட மரபணு (டி.என்.ஏ.) சோதனையில் ஒரு தம்பதி அண்ணன், தங்கை என தெரிய வந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த சமீபத்தில் திருமணமான தம்பதி குழந்தைப் பேறு பாதுகாப்பாகவும் பிறக்கும் குழந்தை நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் மரபணு (டி.என்.ஏ.) சோதனையை ஹூனான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் செய்து கொண்டனர்.
ஆனால், சோதனையின் முடிவு அவர்களை பெரும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில் சோதனையில் அவர்களிடையே 99.9 சதவீதம் ரத்த சம்பந்தம் இருப்பது (சகோதர, சகோதரி முறை) என்பது தெரியவந்துள்ளது.
பெண்ணின் தந்தை 20 ஆண்டுகளுக்கு முன், பையனின் தாயார் மீது காதல் வயப்பட்டிருந்ததாகவும் இதன் விளைவாக, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
ஆனால் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக,அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நேரிட்டது. இந்த திருமணத்தின் மூலம் பிறந்த பெண் குழந்தை காதலியின் குழந்தை திருமணம் செய்ய நேரிட்டது எதிர்பார்க்காத நிகழ்வு என்று பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
பையனின் தாயார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாய் பேச முடியாத நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















