வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியின் கூரையில் இருந்து விழுந்த சீற்றால் துவிச்சர வண்டிகள் சேதம்! மாணவர்கள் மயிரிழையில் தப்பினர்

vav-schoolவவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மூன்று மாடி கட்டிடத்தின் கூரையில் இருந்த சீட் இன்று வீசிய பலத்த காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்டமையினால் மாணவர்களின் துவிச்சக்கரவண்டிகள் சேதமடைந்ததுடன் மாணவாகள் தெய்வாதீனமாக உயிர்தப்பினர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பாடசாலை முடிவடையும் நேரம் கடும் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்த நிலையில் வீடு செல்ல ஆயத்தமான மாணவர்கள் பாடசாலை கட்டிடங்களினுள் ஒதுங்கிக் கொண்டிருந்த சமயம் பெரும் சத்தத்துடன் புதிய கட்டிடத்தொகுதியின் கூரைப்பகுதியில் இருந்து வீழ்ந்த சீட் கட்டிடத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக 3 துவிச்சக்கரவண்டிகள் சேதமடைந்தது. எனினும் மாணவர்கள் கட்டிடங்களின் கீழ் ஒதுங்கி கொண்டமையால் மாணவாகள் எவருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படாது தெய்வதீனமாக தப்பிக்கொண்டனர்.

Tags: ,

Leave a Reply