ஊழல் சுட்டி; இலங்கை 91 ஆவது இடத்தில்

sri_lanka_flagட்ரான்பெரன்சி இன்டர்நசனலின் 2013 ம் ஆண்டிற்கான ஊழல் தொடர்பான சுட்டியில் இலங்கை 91 வது இடத்திலுள்ளது.

இந்த சுட்டியின் பிரகாரம் 37 புள்ளிகளைப் பெற்று இலங்கை 91 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 177 நாடுகள் இந்த தரப்படுத்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது.

இப் பட்டியலில் நியூஸிலாந்தும் டென்மார்க்கும் குறைந்தளவில் ஊழல்கள் இடம்பெறும் நாடுகளாக காணப்படுகின்றன.

ஆப்கானிஸ்தான் வடகொரியா,சோமாலியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகள் மிகவும் மோசமான ஊழல்களை கொண்ட நாடுகளாக தரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையில் லஞ்ச,ஊழல் குறித்து 2310 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுதாக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 565 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Tags: ,

Leave a Reply