ஜிம்முக்கு போகும் முன் கவனிக்க வேண்டியவை

sport1இன்றைய பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். குறிப்பாக இளைஞர்கள் தனது உடல் வளர்ப்பு பயிற்சிகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். நிறைவான வலிமைமிக்க உடலை பெறுவது என்பது வெறும் விறுவிறுப்பான உடற்பயிற்சியால் மட்டும் கிடைப்பதல்ல.

சரியான செயல்முறையும் முதன்மையாக விளங்குகின்றது. உடல் நன்கு அழகாக கட்டுக்கோப்புடன் இருக்க நேரம், குவிப்பு மற்றும் நிலைதிறன் ஆகியவை முக்கியமானவை. அதில் முதல் 6-12 மாதங்களில் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க நேரிடும்.

* உடல் வளர்க்கும் இலக்குகளை தொடங்குவதற்கு முன்பு, மருத்துவரை சந்தித்து உங்களது மருத்துவ நிலைமையை கண்டறிய வேண்டும். எந்த ஒரு உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பும், டாக்டரை சந்திப்பது உடல்நல சிக்கல்கள் வருவதில் இருந்து தவிர்க்க உதவும்.

* கனமான பொருட்களை தூக்குவதற்கு முன்பு, தசைகளை வலுவடையச் செய்தல், நமக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். மேலும் தசைகள் வலியை தாங்கக் கூடியவைகளாக மாறிய பின்பு, உடல் வளர்ப்பு முறையை தொடங்கலாம்.

* எல்லா வகையான நவீனக் கருவிகளும், பல ப்ரீ வெயிட்களும் நிறைந்த கூடத்தை தேர்வு செய்தல் உடல் வளர்ப்பதில் முக்கியமான ஒன்றாகும். மேலும், இடம், சுற்றுச்சூழல், ஆட்கள் மற்றும் கட்டணம் ஆகியவற்றையும் பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

* பாடி பில்டிங்கின் தொடக்க நிலையில் இருப்பதால், சிரமமான முறைகளை செய்வதற்கு முன்பு, மனதை தயார்படுத்தி உடல் வளர்ப்புக்கு அனுமதிக்க வேண்டும். உங்களால் சிரமத்தை கையாள முடியும் என்ற போது அதனை செய்யலாம். மேலும் உங்கள் இலக்குகளை நிதானமாகவும், முறையாகவும் அடைய வேண்டும். அதுமட்டுமின்றி உடலுக்கு ஓய்வு தேவைப்படும் போது, அதிக சிரமம் கொடுக்காமல், ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் செய்யலாம்.

* பளுமிக்க உடற்பயிற்சி சாதனங்களை தூக்குவதற்கு முன்பாக, சின்ன சின்ன உடற்பயிற்சிகளையும், இதய தசைகளுக்கும் அசைவு கொடுங்கள்.

* ஒவ்வொரு வொர்க் அவுட்க்கு பிறகும் ஸ்ட்ரெட்சிங் தசைகளை மீளப்பெறுவதர்க்கும், வீக்கங்களை தவிர்ப்பதற்கும் உதவும். மேலும் இது உடலின் வளையும் தன்மையை பராமரித்து, வொர்க் அவுட் செய்யும் போது ஏற்படும் காயங்களையும் தடுக்க உதவும்.

* பயிற்சியின் போது மூச்சுவிடுதல் மிகவும் முக்கியமான உடற்பயிற்சியாகும். ஒழுங்காக மூச்சுவிடுவது தசை அணுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளிக்கவும், தசைகள் சுருங்கவும், தசைகளை வளர்க்கவும், எனர்ஜியை தருவதற்கும் உதவி புரிகிறது.

* நல்ல சீரான டயட் உடல் வளர்ப்பு பயிற்சியில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. நாள் முழுவதும் வொர்க் அவுட் செய்யும் முன்னும் பின்பும் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் டயட்டில் அதிகமான புரோட்டீன்களும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்து இருக்க வேண்டும்.

* தினசரி உடற்பயிற்சி நடைமுறையை மாற்றிக் கொண்டே இருங்கள். அதனால் உங்களால் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து பார்க்க முடியும். மேலும் அவைகளில் எது உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதையும் கண்டறிய இது உதவும்.

Tags: ,

Leave a Reply